கேரளா ஸ்டைலில் தித்திப்பான அரவணா பாயசம் செய்வது எப்படி?
அரிசி அல்லது மட்டை அரிசி கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த அரவணா பாயசம் பல கேரள கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தித்திக்கும் சுவையில் கேரளா ஸ்டைல் அரவணா பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி- 1 கப்
வெல்லம்- 3 கப்
நெய்-2 ஸ்பூன்
ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
தேங்காய்- 1 துண்டு
செய்முறை
முதலில் அரிசியை 2 -3 முறை நன்கு கழுவிய பின் ஒரு குக்கரில் சேர்த்து 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும்வரை வேகவைக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து அது மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அரிசி நன்கு வெந்து வந்ததும் அதில் வெல்ல பாகை வடிகட்டி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
தண்ணீர் சுண்டி நன்கு கெட்டியாகி வந்ததும் அதில் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள், நெய் சேர்த்து கிளறவும்.
இறுதியாக ஒரு தாளிப்பு கடாயில் நெய் சேர்த்து அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுத்து பாயசத்தில் சேர்த்து இறக்கினால் அருமையான சுவையில் அரவணா பாயசம் தயார்.