ஆன்மிகம்

இந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் வீட்டில் பணமும் பொங்கி வருமாம்..!

பொதுவாகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவது வழக்கம். இம்மாதம் 15 ஆம் திகதியன்று சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார். பொங்கல் என்றாலே பொதுவாக அனைவரும் சூரிய பொங்கல் வைப்பதே அதிகம். அந்தவகையில் எந்நேரத்தில் வீட்டில் பொங்கல் பொங்கலாம் எனவும் எப்படி பொங்கலாம் எனவும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

பொங்கலை எந்நேரத்தில் வைக்கலாம்?
2024ம் ஆண்டில் ஜனவரி 14ம் திகதி போகிப் பண்டிகையும், ஜனவரி 15ம் திகதி தைப்பொங்கலும், ஜனவரி 16ம் திகதி மாட்டுப்பொங்கலும், ஜனவரி 17ம் திகதி காணும் பொங்கலும் வருகின்றது.

பொங்கலை நேரம் பார்த்து வைப்பது வழக்கம். ராகு காலம், எமகண்டம் தவிர்த்து மற்ற நேரங்களில் பொங்கல் வைக்கலாம்.

இந்த ஆண்டு காலை 07.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலமும், 10.30 முதல் 12 வரை எமகண்டமும் இருகின்றது. அதை தவிர்த்து, மற்றைய நேரத்தில் வைக்கலாம்.

ஜனவரி 15 பொங்கல் வைக்க நல்ல நேரம்
காலை 06.30 முதல் 07.30 வரை

அல்லது

காலை 09.30 முதல் 10.30 வரை

ஜனவரி 16 மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்

காலை 11 மணி முதல் பகல் 01 மணி வரை

பூஜைக்கு வைக்க வேண்டிய பொருட்கள்
சர்க்கரை பொங்கல், கரும்பு ஆகியவற்றுடன் கல் உப்பு, துவரம் பருப்பு, வெல்லம், பச்சரிசி அல்லது நெல் வைக்க வேண்டும்.

மேல் குறிப்பிட்ட நேரத்தில் பொங்கல் பொங்கினால் வீட்டில் செல்வம் பெருகும்.

Back to top button