ஆன்மிகம்

நாம் வியாழக்கிழமைகளில் வாழைமரத்தை வழிப்பட்டால் நற்பலன்கள் ஏராளம்!

நாம் வாழைப்பூவின் இதழ் ஒன்றை எடுத்து அதில் சம்பள பணத்தை வைத்து, பூஜை அறையில் வைத்து அதிலிருந்து எடுத்து செலவு செய்தால் பணம் வீண் விரயங்கள் ஏற்படாது என்பது ஒரு ஐதீகம். இதே போல் நகை போன்ற மங்கல பொருட்களை வைத்து பயன்படுத்தி வந்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெரும். இந்து மத நம்பிக்கைகளின்படி ஒவ்வொரு நாளும் ஒரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இதனால் ஒவ்வொறு நாளும் ஒரு தெய்வத்திற்குரிய நாளாக குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் வியாழக்கிழமை பெருமாளையும், குரு பகவானையும் வழிபடுவதற்கு உரிய நாளாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதோடு வியாழக்கிழமையில் வாழை மரத்தை வழிபடும் வழக்கமும் உள்ளது. வாழை மரத்தில் குரு பகவான் வாசம் செய்வதாக ஐதீகம்.யாரெல்லாம் வாழை மரத்தை வழிபடலாம்? இதனால் வியாழக்கிழமையில் வாழை மரத்தை வழிபட்டால் குரு பகவானின் அருளும், பெருமாளின் அருளும் பரிபூரணமாக கிடைத்து வழிபடும் பக்தரின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

மேலும், வியாழக்கிழமையில் குரு பகவானை வழிபடுவதால் செல்வ வளம், ஞானம், மதிப்பு, மரியாதை, கெளரவ பதவிகள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். திருமணம் தாமதமாகும் கன்னிப் பெண்கள், நல்ல கணவன் அமைய வேண்டும் என நினைக்கும் பெண்கள் வியாழக்கிழமையில் விரதம் இருந்து வாழை மரத்தை சுற்றி வந்து வழிபடலாம். இவ்வாறு வழிபடுவதால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடப்பதுடன், நல்ல வாழ்க்கை துணையும் அமையும். வாழை மரத்தை வழிபடும் முறை வியாழக்கிழமையில் அதிகாலையில் எழுந்து நீராடி, மஞ்சள் நிற ஆடை அணிய வேண்டும். வடகிழக்கு திசை நோக்கி பெருமாளை வழிபட்டு, பிறகு வாழை மரத்தை வழிபட வேண்டும். வாழை மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து கொண்டைக் கடலை, இனிப்பு, அட்சதை அரிசி, மலர்கள் படைத்து வழிபட வேண்டும். வாழை மர வழிபாட்டு பயன்கள் வாழை மரத்தின் அடிப்பகுதியில் நெய் விளக்கேற்றி, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். வியாழக்கிழமையின் மகிமை சொல்லும் கதையை படித்து மரத்தை வலம் வந்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதால் பெருமாள் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பார். வாழை மரத்தில் வீட்டில் இருந்தால் மட்டுமே இது போன்று வழிபட வேண்டும். மற்ற இடங்களில் இருக்கும் வாழை மரங்களை வழிபடக் கூடாது. வீட்டின் வேலிக்கு வெளிப்புறமோ அல்லது கோவிலிலோ உள்ள வாழை மரத்தையும் வழிபடலாம்.

Back to top button