ஆன்மிகம்

தினமும் இப்படி செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும்!

பெரும்பாலும் குடும்பம் ஒன்றில் விளக்கேற்றுவது ஒரு பெண்ணாக தான் உள்ளனர். பெண்கள் இல்லாத வீட்டில் தான் ஆண்கள் விளக்கேற்றுவார்கள். விளக்கு ஏற்றுவதில் பல நியதிகள் உள்ளன. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால், திரியின் அளவு, பயன்படுத்த வேண்டிய எண்ணெய் மற்றும் வைக்கும் திசை ஆகியவை காணப்படுகின்றன.

விளக்கு ஏற்றுவதை தவிர்த்து, விளக்கை அணைப்பதிலும் நியதிகள் காணப்படுகின்றன. விளக்கை வாயில் ஊதி அணைக்கக்கூடாது மற்றும் ஆண்கள் விளக்கை அணைக்க கூடாது என்றும் கூறுவார்கள். அவ்வாறு இருக்கையில் விளக்கு வைத்து இறைவனை வழிப்படும் பொழுது சிலவற்றை வேண்டிக்கொள்வோம். அது நிறைவேறவில்லை என்றும் கவலையிடுவதுண்டு. இந்தப்பதிவில் நாங்கள் எவ்வாறு விளக்கேற்ற வேண்டும் எப்படி விளக்கேற்ற வேண்டும் மற்றும் கைகளை எப்படி வைத்தவாறு விளக்கு ஏற்ற வேண்டும் என்று தெரிந்துக்கொள்வோம்.

1. விளக்கேற்றுபவர்கள் தனது கைகளில் மஞ்சளை பூசி அதனுடன் சென்று விளக்கேற்றினால் வேண்டியது எல்லாம் நடக்கும் என்று ஸ்தாத்திரம் கூறுகின்றது.

2. விளக்கு ஏற்றும் பொழுது எவராக இருந்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும்.

3. விளக்குகளை வெறும் தரையில் வைக்கக் கூடாது.

4. காலையில் 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும்.

5. மாலை 6.00 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

6. காலை மற்றும் மாலையில் விளக்கேற்றும் போது வீட்டின் பின்புறக் கதவை மூடிவிட வேண்டும்.

7. விளக்கு தானாக அணையவிடக் கூடாது.

8. உடைந்த விளக்கை பயன்படுத்த வேண்டாம்.

இந்த முறைகளை தினமும் கடைப்பிடித்து வந்தாலே வீட்டில் லட்சுமி தங்கிவிடும் என்பது உறுதி.

Back to top button