காலையில் இதை செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும்!
18 மகாபுராணங்களில் ஒன்றான கருட புராணத்தில், ஒருவர் காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்க செல்லும் முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். கருட புராணம் என்பது வைஷ்ணவ பிரிவினருடன் தொடர்புடைய ஒரு வேதமாகும், இது பொதுவாக குடும்ப உறுப்பினர் இறந்த பிறகு வீட்டில் ஓதப்படும். எனவே, கருட புராணம் முக்தியை வழங்கும் நூலாகக் கருதப்படுகிறது. ஸ்நானம், தானம், யாகம், வேதம் பயிலுதல், தெய்வ வழிபாடு இவைகளை வணங்காத நாள் மனிதர்களுக்கு வீண் நாள் என்று கூறப்படுகின்றது.
உடல் மற்றும் மனதில் தூய்மைக்காக குளிப்பது முக்கியமான ஒன்றாகும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் குளிக்கின்றனர். ஆனால் தினமும் குளிப்பதால் நாம் சுறுப்பாக இருப்பதுடன் நோயிலிருந்தும் விலகி இருக்க முடியும். சுப பலன்களையும் பெறலாம். அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். இவ்வாறு காலையில் ஏதாவது ஒரு பொருளை தானம் செய்தால் உணவு மற்றும் பணத்தட்டுப்பாடு வராமல் இருப்பதுடன் செல்வச் செழிப்பு ஏற்படும்.
இதே போன்று குளித்துவிட்டு தினமும் விளக்கு ஏற்றுவது முக்கியமாகும். வீட்டை சுத்தப்படுத்துவது மற்றும் எதிர்மறை ஆற்றலையும் நீக்குகின்றது. வாஸ்து தோஷங்களும் நீங்கும். காலையில் மந்திரங்களை உச்சரித்து வழிபாட்டில் ஈடுபடுவது வீட்டில் மிகப்பெரிய தடைகள் எதுவும் வராமல் தடுக்கப்படுகின்றது. கடினமான மந்திரங்களை உச்சரிக்க முடியாவிட்டாலும், எளிய மந்திரங்களை உச்சரிக்கவும்.