ஏனையவை

வீட்டில் பால் இருந்தால் போதும்… சூப்பரான ஸ்வீட் செய்யலாம்

பொதுவாகவே அனைவருக்கும் பாலில் செய்யப்படும் உணவுகளை அதிகமாகவே பிடிக்கும். ஈசியாகவும் ருசியாகவும் செய்யலாம். அந்தவகையில் வீட்டில் அடிக்கடி இருக்கும் பொருளான பாலை வைத்து எப்படி ‘பால் பேடா’ செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முழு கிரீம் பால் – 2 லிட்டர்

சர்க்கரை – 1 கப்

ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்

நெய் – தேவைக்கேற்ப

செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் முழு கிரீம் பாலை அடிப்படிக்காமல் கொதிக்க வைக்கவும்.

பால் கொதித்துக் கொண்டிருக்கும் போது திரிந்து வரும் பாலை மீண்டும் பாலுடன் சேர்த்து கலந்துக்கொண்டே இருக்கவும்.

அடுத்து சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.

அதை சுமார் 5-8 நிமிடங்களுக்கு கலக்கவும்.

அடுத்து அடுப்பில் இருந்து இறக்கி, கெட்டியானவுடன் கைகளில் நெய் தடவி குக்கீ போன்று வடிவத்தில் தட்டி எடுக்கவும்.

இறுதியாக குளிர்சாதன பெட்டியில் 4-5 நேரம் வைத்து பறிமாறவும்.

Back to top button