இலங்கை

IMF இடமிருந்து கிடைத்த கடன்! பயன்படுத்தப்பட்ட 121 மில்லியன் டொலர்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் கொடுப்பனவின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெள்ளிக்கிழமை (24) தெரிவித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கருத்துப்படி சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட 333 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 121 மில்லியன் அமெரிக்க டொலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கிரெடிட் லைன் கடன் தவணையை செலுத்துவதற்காக நேற்று (23) இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார். மார்ச் 20 அன்று, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக 2.286 பில்லியன் (சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாத நீட்டிக்கப்பட்ட ஏற்பாட்டிற்கு IMF ஒப்புதல் அளித்தது.

Back to top button