இலங்கை

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளல் தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்!

இலங்கையில் கடவுச்சீட்டு தொடர்பான மோசடிகளை தடுப்பதற்கும், வரிசைகளை தவிர்ப்பதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் இலகுவாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் 50 பிரதேச செயலக அலுவலகங்களில் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் மாதத்தில் புகைப்படம், கைரேகை போன்றவற்றை சேகரிக்க, பிரதேச செயலகங்களில் 50 இடங்கள் ஸ்தாபிக்கப்படள்ளது. இம்முறையின் ஊடாக விண்ணப்பதாரர் ஒருவர் தனது கடவுச்சீட்டை 3 நாட்களுக்குள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும். அதன்பிறகு எவரும் பத்தரமுல்லைக்கு வர தேவையில்லை. மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு நேரடியாக வீட்டுக்கு அனுப்பப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Back to top button