இலங்கை
அரச ஊழியர்கள் தொடர்பாக வெளிவந்த முக்கிய தகவல்!
நாளைய தினம் முதல் அரச ஊழியர்கள் வேலைக்குச் செல்லும் போதும், வெளியேறும் போதும் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன்,17 லட்சம் அரச ஊழியர்களை பராமரிப்பதற்கு வருடாந்தம் 1.4 ட்ரிலியன் ரூபா செலவிடப்படுமென முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். செலவிடப்படும் பணத்துடன் ஒப்பிடும் போது அவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான நன்மை கிடைக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.