இலங்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி ஆரம்பமாக்கியுள்ளது. அந்தவகையில், 4 இலட்சம் விண்ணப்பங்கள் கோரும் பணிகள் இன்று (10.2.2024) சனிக்கிழமை ஆரம்பமாகி உள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களுக்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடும்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் பயன்படுத்தப்படும் நிபந்தனைகளின்படி யாராவது இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றால் அவர்களும் இதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அஸ்வெசும கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button