இலங்கை

காலி வீதியைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பின் முக்கிய வீதி மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடலுக்கும், செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடலுக்குமான காலி வீதியே இவ்வாறு மூடப்படப்படவுள்ளது.

அதன்படி ஜனவரி 29 முதல் பெப்ரவரி 2 வரை காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் மற்றும் பெப்ரவரி 3 ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தின வைபவம் முடியும் வரை குறித்த வீதி மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button