இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு; 16 மணித்தியால தடை

கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் (17) 16 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த நீர் விநியோகத் தடையானது நாளை மாலை 5மணி முதல் மறுநாள் முற்பகல் 9 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button