இலங்கை

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தின் www.onlineexams.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button