இலங்கை

இலங்கையில் தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

நாட்டின் புதிய வற் வரி நடைமுறைக்கு அமைய தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

38.4 சதவீதமாக இருந்த தொலைபேசி சேவைகளுக்கான மொத்த வரி விகிதம் 42 சதவீதமாக இருக்கும் என்று தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தெரிவித்துள்ளனர்.

இணைய சேவைக் கட்டணங்களுக்கான புதிய வற் திருத்தத்திற்கு பின்னர் 20.3 முதல் 23.5 வரை இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வரிகளில் ஓய்வு வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வரி ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button