இலங்கை
டொலருக்கெதிராக ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (17) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 302.42 ரூபாவாகவும், விற்பனை விலை 316.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், நேற்றைய தினம் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 305.43 ரூபாவாகவும், விற்பனை விலை 318.79 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.