உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி: தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்
கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்த போதிலும், தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, அமெரிக்காவும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. இதனால், அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் சிலிக்கன் வெலி வங்கி, சிக்னேச்சர் வங்கி மற்றும் பெஸ்ட் ரிபப்லிக் வங்கி ஆகியன கடந்த சில வாரங்களுக்குள் மூடப்பட்டுள்ளன.
அதேவேளை, மேலும் பல வங்கிகள் மூடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதனால், வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்கள், அந்த முதலீட்டு தொகையை மீளப் பெற்று, அதனை தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளமையினால், கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை கடுமையாக சர்வதேச சந்தையில் அதிகரித்து செல்வதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.