யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்திய நிதியமைச்சர்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் நிதி அமைச்சர் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு நிர்மலா சீதாராமன் வந்தடைந்துள்ளார். இவரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சார்ள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். இவருடன், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இந்திய உயர்மட்ட குழுவும் வருகை தந்துள்ளது.
இந்நிலையில் நவம்பர் முதலாம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இந்திய அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இவர், யாழ்ப்பாண கலாச்சார மையத்தை பார்வையிட்டார்.
மேலும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் செல்லவுள்ளதுடன் யாழ் பொது நூலகத்தினையும் பார்வையிடவுள்ளார். அதுமாத்திரமல்லாமல் பாரத ஸ்டேட் வங்கியின் யாழ்ப்பாணக் கிளையையும் (SBI) அவர் திறந்து வைக்கவுள்ளார்.