இலங்கை
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது இலங்கைக்கு சுனாமி அபாயம் நீங்கியுள்ளதாக இலங்கையின் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது. எனவே இலங்கையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையை அண்மித்த இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.6 ரிச்டர் அளவில் இன்று (30) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.