இலங்கை
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா தொடர்பில் வெளிவந்த தகவல்!

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த வகையில், பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 22 லீட்டராகவும் ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 14 லீட்டராகவும் மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் கோட்டா 14 லீட்டராகவும் கார்களுக்கான எரிபொருள் கோட்டா 40 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
