இலங்கை
இலங்கையில் தடை செய்யப்படவுள்ள பொருட்கள் குறித்து வெளியான தகவல்!
இலங்கையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடைசெய்யப்படும் என்றும் அமைச்சர் நசீர் அகமது Hafis Nazeer Ahamed குறிப்பிட்டுள்ளார். பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர்/ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள், மற்றும் பிளாஸ்டிக் இடியப்பத் தட்டுகள் ஆகிய பொருட்களே இவ்வாறு தடை செய்யப்ப்படவுள்ளன.
இந்நிலையில், மத்திய சுற்றாடல் அதிகார சபையானது நாட்டின் காற்றின் தரப் பாதுகாப்பு நிலையை அறிக்கை அளிப்பதற்கான அவசரகால பதில் செயல் திட்டம் ஒன்றை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் மேலும், சுற்றாடல் அமைச்சு, மின்சாரம் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரித்து வருவதாகவும் அமைச்சர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.