இலங்கை

நாட்டில் பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் இரண்டு வாரங்களில் பேருந்து கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இன்று (01.2.2024) அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தனியார் பேருந்து சங்கங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், கட்டாயமாக இரண்டு வாரங்களுக்குள் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 35 ரூபாயாக இருக்கும் என்றும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். மேலும், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Back to top button