உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்
இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி நாட்டின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு பெப்ரவரியில் சுமார் 28 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
அத்துடன் அன்னிய சொத்துகளின் கையிருப்பும் மார்ச் மாதத்தில் 21.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பெப்ரவரியில் 2,219 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு சொத்து கையிருப்பு மார்ச் மாதத்தில் 2,691 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது
உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு கடந்த மாதம் 20.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மார்ச் மாதத்தில் 2,184 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2,628 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.