இலங்கை

மின் துண்டிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுமார் எட்டு இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வழங்கப்பட்ட கால இடைவெளிக்குள் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாகவே இவ்வாறு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மின் கட்டணம் செலுத்தாததால் நாடு முழுவதும் சுமார் 12 இலட்சம் வீடுகளுக்கு சிவப்பு கட்டணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை நாட்டில் மொத்த மின் நுகர்வோர் எண்ணிக்கை சுமார் 70 இலட்சம் ஆகும். இவ்வருடம் இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பலருக்கு மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் சிலர் ஆபரணங்களை அடகு வைப்பது, மின்கட்டணத்தை செலுத்த கடன் வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், உரிய நேரத்தில் மின்கட்டணத்தைச் செலுத்தாததால், எதிர்காலத்தில் மின்வெட்டு அதிகரிக்கலாம் என்றும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீட்டெடுக்கும் நேரமும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Back to top button