இலங்கை

முட்டை, கோழி இறைச்சி விலைகள் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

அடுத்த 2 மாதங்களுக்குள் முட்டை விலையும், கோழி இறைச்சி விலையும் குறையும் என்று கால்நடை மேம்பாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்மைக்காலமாக டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பல பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. எனினும் சந்தையில் எந்தவொரு பொருட்களின் இதுவரை குறைவடையவில்லை என்றும் பழைய விலையே பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button