இலங்கை

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான தகவல்

HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்று (07.2.2024) நடைபெற்றுள்ளது.

டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆளுநர் சுட்டிக்காட்டி உள்ளார்.

HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ளவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு திறைசேரிக்கு செந்தில் தொண்டமான் பரிந்துரை செய்துள்ளார்.

Back to top button