ஏனையவை

Instant Dosa: மாவு அரைக்க தேவையில்லை.., ஒரு கப் ரவை இருந்தால் போதும்

தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள். தோசையில் பிளைன் தோசை, மசால் தோசை, ரவா தோசை, ஆனியன் தோசை, மற்றும் கல் தோசை போன்ற பல வகை உண்டு. அந்தவகையில், சுவையான ரவா தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ரவை- 1 கப்
அரிசி மாவு- 1 கப்
மைதா- 2 ஸ்பூன்
தயிர்- 2 ஸ்பூன்
இஞ்சி- 1 துண்டு
பச்சைமிளகாய்- 2
மிளகு- 1 ஸ்பூன்
சீரகம்- ½ ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
உப்பு- தேவையான அளவு
வெங்காயம்- 1

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்துள்ள ரவை, அரிசி மாவு, மைதா, தயிர், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், மிளகு, சீரகம், நறுக்கிய கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

பின் இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு போல் இல்லாமல் இன்னும் தண்ணீயாக கரைத்து கொள்ளவும்.

பின் இதனை ஒரு 15 நிமிடத்திற்கு மூடி போட்டு அப்படியே வைக்கவும். அடுத்து இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதனைத்தொடர்ந்து, அடுப்பில் தோசை கல் வைத்து நன்கு சூடானதும் இதில் கரைத்து வைத்துள்ள மாவை தோசை கல்லில் ஊற்றவும்.

இதன் மேல் எண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலை தூவி சிவந்ததும் எடுத்து பரிமாறினால் சுவையான ரவா தோசை தயார்.

Back to top button