உடல் ஆரோக்கியத்திற்கு Air Fryer-ல் சமையல் முறை நல்லதா? நிபுணர் கூறும் கருத்து
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் பல புதுமையான சமையல் முறைகள் தோன்றியுள்ளன. பழங்கால சமையல் முறை உணவின் சுவை மற்றும் உணவின் ஊட்டச்சத்து மதிப்பையும் உறுதி செய்கிறது. சமீபத்தில், ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா Air Frying சமையல் முறைகளைப் பற்றி கூறியிருந்தார். Air Frying-ல் இறைச்சி , சீஸ் போன்ற உணவுகள் சமைக்கும் போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும். Air Frying-ல் உணவுகள் அதிக வெப்பநிலைக்கு வெளிப்படும் போது, Advanced glycation end-products(AGEs) உற்பத்தி செய்யப்படுகின்றன.
இருப்பினும் நிபுணர் கூறுகையில், Air fryer உணவை சமைக்க குறைந்த வெப்பத்தைப் பயன்படுத்துவதால் இதன் மூலம் உணவை Deep frying செய்யும், இது எண்ணெயில் 70 முதல் 80 சதவிகிதம் குறைகிறது.
இக்குறித்த ஆய்வின்படி, Air fryer புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் acrylamide என்ற வேதிப்பொருளைக் குறைக்கிறது என்றும் மாவுச்சத்துள்ள உணவுகளை வறுக்கும்போது இந்த ரசாயன கலவை வெளிப்படுகிறது, என்றும் கூறினார். மேலும் அவர் Deep frying உடன் ஒப்பிடும்போது Air Frying அதிக சத்துக்களை தக்க வைத்துக்கொள்ள உதவும் என்கிறார். சமைக்கும் போது குறைந்த வெப்ப வெளிப்பாடு ஆகியவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பாதுகாக்க உதவுகின்றன. இருப்பினும் குறைந்த சமையல் நேரம் மற்றும் Air Frying-ல் Deep frying சமையலுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மாற்றாக இருக்கும் என்றும் கூறினார்.