தூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவுகளை சாப்பிடவே சாப்பிடாதீங்க…

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மற்றும் உடற்பயிற்ச்சி எந்தளவு முக்கியமோ அதே அளவு சிறந்த தூக்கமும் இன்றியமையாதது.
ஆனால் தற்காலத்தில் முறையற்ற உணவுபழக்கம் மற்றும் போதிய உடற்சிறின்மை போன்ற காரணங்களால் பெரும்பாலானவர்கள் இரவில் போதிய தூக்கம் இன்றி அவதிப்படுகின்றனர்.
பகல் நேரத்தில் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைகளால் அவை ஜீரணித்துவிடும். இரவு நேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவைச் சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புக்கள் ஆரோக்கியமாக செயல்பட்டும்.
அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரசினைகளில் இருந்து பாதுகாப்பதுடன் நிம்மதியான தூக்கத்துக்கும் வழிவகுக்கும்.
அந்த வகையில் இரவில் சாப்பிடுவதால் தூக்கத்தை பாதிக்கும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
இரவு உணவில் தக்காளியை சேர்த்துககொள்வதால் அதில் காணப்படும் டைராமின் என்ற வேதிப்பொருள் மூளையின் வெயற்பாட்டை அதிகரிக்கச் செய்கின்றது.அதனால் இரவில் தூக்கம் வருவது சிரமமாக இருக்கும்.
காரமான உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்த தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
காரணம் காரமான உணவுகள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும் அதனால் தூக்கம் பாதிக்கப்படும்.
ஐஸ்கிறீம் மற்றும் சாக்லேட்டில் சாக்ரின், காஃபின், சர்க்கரை, கொழுப்புச்சத்து போன்றவை உள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதால், தூக்கம் பாதிக்கப்படும்.
இப்படியான நிம்மதியற்ற தூக்கம் தொடர்ந்தால், உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து திசுக்கள் உடைய நேரிடும்.மேலும், காஃபின் செரிமானத்தைப் பாதித்து அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
இறைச்சியில் அதிக அளவிலான புரோட்டினும் கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே, இதைச் செரிக்க அதிக நேரம் எனர்ஜி தேவைப்படும்.
இரவு நேரத்தில் அத்தகைய ஆற்றல் கிடைக்காது. இறைச்சி உணவுகள் ஜீரணமாக மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். ஆகையால், செரிமானக் கோளாறு ஏற்பட்டு தூக்கமின்மை பிரச்சினைக்கு வழிவகுக்கும்.