உடல்நலம்

உணவில் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லதா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

உணவில் தேங்காய் அதிகமாக சேர்த்துக் கொள்வது நன்மையளிக்குமா? அல்லது தீமையா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேங்காய்
தேங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மட்டுமின்றி நல்ல கொழுப்புகளையும் கொண்டுள்ளது. இவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றது.

இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி செய்வதுடன் மலச்சிக்கலையும் தடுக்கின்றது.

தேங்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சரும ஆரோக்கியம் மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கின்றது.

அதிக கலோரிகள் கொண்ட தேங்காயை அதிகமாக சாப்பிட்டால், உடல் எடை அதிகரிப்பதுடன், கெட்ட கொழுப்பின் அளவையும் அதிகரிக்க வைக்கும்.

அளவோடு தேங்காயை எடுத்துக்கொள்ளவில்லையெனில், ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும். தேங்காய் துருவல், தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் போன்றவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தேங்காய் சட்னி, தேங்காய் பால் சாதம், தேங்காய் லட்டு போன்ற உணவுகளாக செய்தும் சாப்பிடலாம். ஆனால் தேங்காய் சாப்பிட்டு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Back to top button