இலங்கை
இலங்கையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி விடுமுறை தினமா? வெளியானது அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை (05.02.2024) விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் அதற்கு மறுதினம் திங்கட்கிழமை விடுமுறை தினம் என தகவல்கள் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (02.02.2024) வெளியிட்டுள்ளார். இதன்படி, திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனவும் யசரத்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.