ஏனையவை

இந்த லட்டு செய்றது இவ்ளோ ஈசியா? சாப்பிட்டால் போதும் நிறுத்தவே மாட்டீங்க!

பொதுவாகவே இனிப்பு என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் பண்டிகை நேரங்களில் செய்யப்படும் இனிப்பு என்றால் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? இனிப்பு வகையிலும் லட்டு என்றால் ஒரு சுவை இருக்க தான் செய்யும். லட்டு வகைகளை நாம் கடையில்தான் வாங்குவோம். ஆனால் இதை நாம் வீட்டில் செய்ய முடியும். ஆகவே அதை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள் – 250 கிராம் கடலை மாவு, 400 ml தண்ணீர், ஆரஞ்சு -ரெட் ஃபுட் கலர் சிறிய அளவு, பொறிக்க எண்ணெய், 500 கிராம் சர்க்கரை , 250 ml தண்ணீர், ஏலக்காய் பொடி ஒரு ஸ்பூன், 2 டேபிள் ஸ்பூன் நெய்

செய்முறை – முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மா மற்றும் தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கொண்டு வரவும். பின் ஆரஞ்சு- ரெட் ஃபுட் கலரை சேர்த்து, ஒரு ஓட்டையுள்ள கரண்டியில் பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சர்க்கரை, தண்ணீர், ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்க்கவும். அதில் பொறித்து எடுத்த பூந்தியை சேர்க்கவும். இறுதியாக 2மணித்தியால் ஊற வைத்து, பின் சிறிய உருண்டைகளாக பிடித்து எடுத்தால் சுவையான ல்ட்டு ரெடி!

Back to top button