உடல்நலம்

வாரம் ஒரு முறை நாட்டுக் கோழி சூப் குடித்தாலே போதும்! அற்புத பயன்கள் ஏராளம்

அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் சூப் என்றால் அது நாட்டுக்கோழி சூப் தான். சூப் உடலுக்கு மிகவும் நல்லது.. சூப்புகளில் பல வகைகள் உள்ளன. அசைவ பிரியர்கள் அது சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட..! சளி பிடித்திருக்கும் போது, ஒரு கப் நாட்டுக்கோழி சூப் குடித்தால், சளியில் இருந்து ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைரஸ் தொற்றுகளை எதிர்கொள்ள இந்த நாட்டுக் கோழி சூப் வாரம் ஒரு முறை குடியுங்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அவ்வபோது சளி பிடிப்பது உண்டு. அதிலும் மழைக்காலங்களில் காய்ச்சல் என்பது பொதுவானது. இந்த சளி உடலில் சேர்ந்து நெஞ்சில் கட்டிக்கொள்ளும்.

சளி

அனேகமாக, குழந்தைகளும் வயதானவர்களுக்கும் தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். அதனால் தான் அடிக்கடி சளி பிடித்து அவதிக்குள்ளாவார்கள். மருந்து மாத்திரைகள் எல்லாமே சளி பிரச்சனையை வெளியேற்றினாலும் அவை தற்காலிகமானதுதான். இதனை இயற்கை வழிகள் மூலம் போக்க நாட்டு கோழி சூப் சாப்பிடலாம்.

Back to top button