இலங்கை

யாழ் – கொழும்பு விமான கட்டணம் வெளியானது ; அதிர்ச்சியில் மக்கள்!

கொழும்பு – இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு ஒரு வழிப் பயணத்திற்கு 22,000 ரூபாவாகவும், இரு வழி பயணத்திற்கு 41,500 ரூபாவாகவும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையை ஜூலை 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வெளியானது யாழ் – கொழும்பு விமான கட்டணம்; திகைப்பில் மக்கள்! | Released Jaffna Colombo Airfare People In Awe தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அமைச்சர் இதனை அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது எதிர்வரும் வரும் மாதங்களில் மேலும் பல உள்நாட்டு இடங்களுக்கு சேவைகளை முன்னெடுக்க டிபி ஏவியேஷன் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Back to top button