இலங்கை
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல்: தப்பியோடிய சந்தேகநபர்கள்

யாழ் – கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு (04.01.2024) இடம்பெற்றுள்ளது. கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் உற்சவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் முச்சக்கரவண்டி ஒன்றை சேதப்படுத்தியதுடன் நபர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தித் தப்பிச் சென்றுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வாள்வெட்டு சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.