ஜப்பான் மக்களின் ஆரோக்கியத்துக்கான காரணம்

ஜப்பான் மக்களின் ஆரோக்கியம் பற்றி பேசும் போது ஜப்பான் பற்றி சொல்லி ஆக வேண்டும் ஜப்பான் என்பது பல தரமான உற்பத்திகளின் பிறப்பிடம் எனலாம் அங்குள்ள மக்கள் நீண்ட ஆயுளுடனும் சுறு சுறுப்பாகவும் காணப்படுவார்கள். இதற்க்கு என்ன காரணம் என்றால்? அந்த மக்கள் கடை பிடிக்கும் பழக்கவழக்கவழக்கமே ஆகும்.

IKIGAI
நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன நாம் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு நிறைவான வாழ்க்கையாக இருந்ததா என்று நான் யூகிக்கும் வண்ணம் அதாவது விளக்கமாக சொல்லவதென்றால் பிடித்தவற்றை செய்து பிடித்ததால் என் வாழக்கையை நிரம்பியிருக்க வேண்டும் .
இலக்கை நிர்ணயிப்பதை விட நோக்கை கண்டுபிடித்தல் ஆகும் . இலக்கு என்பது அடையும் பட்சத்தில் வெறுமை உண்டாக்கும். ஆனால் நோக்கு அப்படியானது அல்ல அது வாழ் நாள் முழுதும் தொடர்ந்து செல்லும்.
எனவே பிடிச்ச துறையில் வேலை செய்வதையும் கூறலாம் .

SIKITHAGANAI
மாற்றவே முடியாத விடயங்களை அதன் போக்கில் விட்டு விடுதல் .அதற்கு அதிக முயற்சியை போட்டு வீண் விரயம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை .
ஆனால் ஏதோ ஒரு விடயத்தை சரி செய்ய முடியும் என்றால் அதற்காக முடிந்த வரை முயற்சிகளை எடுத்து பார்த்தல்.

OUBAITORI
உங்களை மற்ற நபர்களுடன் ஒப்பிடுவதை தவிர்த்துவிடுதல் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு சிறப்பு மிக்கவர் எனவே மற்ற நபர்கள் இப்படியானவர் என நொந்துகொள்ள வேண்டாம்.
நாம் யார் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை ஒப்பிடுதல்.

KIZEN
இது மிக முக்கியமானது இது அங்குள்ள நிறுவனங்களில் மிகவும் வன்மையாக கடை பிடிக்கப்படுகிறது.
தொடர்ச்சியான முன்னேற்றம் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவரும் மாற்றம் மாற்றங்களை தொடர்ச்சியாக செய்யுது அதில் பெரிய வெற்றிகளை பெறலாம்.

SHUHARI
அடிப்படையை கற்றுக்கொள்வது அதன் பின் அதை பயிற்சி செய்வது பின்னர் பயன்படுத்துவது.