ஏனையவை
இலங்ககையில் நகை கடையொன்றில் கோடிக் கணக்கான நகைகள் திருட்டு; திகைப்பில் பொலிஸார்
களுத்துறை வடக்கில் உள்ள தங்க நகை கடையொன்றில் இலட்சக்கணக்கான பணம் மற்றும் கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 17 ஆம் திகதி இரவு இருவர் நகை கடையின் கதவின் பூட்டை வெட்டி உள்நுழைந்து நகைகளை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் கடைக்குள் இரண்டு மணித்தியாலம் காணப்பட்ட இவர்கள் இவற்றை திருடி சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.