ஏனையவை

கரட் மட்டும் இருந்தால் போதும்: சுவையான இனிப்பு பண்டம் தயார்

குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பது இனிப்பு பண்டங்கள் தான், அதை நாங்கள் அவர்களுக்கு சுவையானதாக மட்டும் கொடுத்தால் போதாது. ஆரோக்கியமாகவும் கொடுக்க வேண்டும். அந்த வகையில் கரட்டை வைத்து ஒரு சுவையான இனிப்பு பண்டத்தை செய்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை உண்ண கொடுங்கள்.

கரட்டில் அதிகளவு வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இதனால் கண்பார்வை தெளிவாக இருக்கவும் இது பெரிதும் உதவுகின்றது. இப்படியான குணநலங்கள் கொண்ட கரட்டை குழந்தைகள் விரும்பி உண்பது மிகவும் குறைவு . அதனால் தான் நாம் கரட்டை வைத்து நாவில் கரையும் அல்வா செய்வது எப்படி ? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்

கரட் – அரை கிலோ
தணணீர் – அரை லீட்டர்
சீனி – அரை கப்
கோன் பிளா – 3 தேக்கரண்டி
புட் கலர் சிவப்பு நிறம் – 2 தேக்கரண்டி
டெசிகேட்டட் கோகனட் பௌடர் – தேவையான அளவு
செய்யும் முறை
தேல் சீவிய கரட்டை துண்டுகளாக நறுக்கி அதை கழுவி எடுத்து கொள்ளவும். பின்னர் அதை தண்ணீர் சேர்த்து கரட் நன்றாக நசியும் அளவிற்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

பின் அதை ஒரு மிக்சியில் போட்டு அதனுடன் சீனி மற்றும் கோன் பிளா சேர்த்து நன்றாக க்ரீமியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

இந்த கலவையில் ரெட் புட் கலர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து அரைத்து கொள்ளவும். உங்களுக்கு புட் கலர் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் நீங்கள் சேர்க்காமலும் இதை பண்ணலாம்.

வென்னிலா அல்லது ரோஸ் எஸன்ஸ் விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம்.

பின்னர் ஒரு பேனில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து நன்றாக கிண்டிக்கொண்டு இருக்கவும். கெட்டியாகும் வரை நன்றாக கிண்ட வேண்டும். பின்னர் அதை அடுப்பில் இருந்து எடுத்து ஆற வைக்க வேண்டும்.

பின் அதை ஒரு அளவாக எடுத்து லட்டு போன்று உருட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

உருட்டும் போது கையில் ஒட்டினால் கையில் நெய் எண்ணை அல்லது தண்ணீர் தடவி உருட்டலாம்.

உருட்டி எடுக்கப்பட்ட உருண்டைகளை டெசிகேட்டட் கோகனட் பௌடரில் உருண்டைகளை டிப் பண்ணி கொள்ளவும்.

அதன் பின்னர் சுவையான மிகவும் மெதுவான நாவில் கரையும் Carrot Delight தயார்.

Back to top button