உடல்நலம்

சளித் தொல்லையிலிருந்து விடுபட இதை செய்தாலே போதும்

காலநிலை மாற்றத்திற்கு ஏற்பட பலரையும் வாட்டி வதைக்கும் தொந்தரவுகளில் முக்கியமானது இருமல். சிலருக்கு தண்ணீர் மாற்றி அருந்தினால் கூட தொண்டை பாதிக்கப்பட்டு வறட்டு இருமல் வரக்கூடும். சளி இருமலாக இருந்தால் அவ்வளவு தான், எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல் இருக்க நேரிடும். அதிலும் கட்டி இருக்கும் சளியை எவ்வாறு குணமாக்குவது என்ற சந்தேகம் பலர் மத்தியில் நிலவி வருகின்றது. ஆகவே வைத்தியசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே, இருமலை சரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் – கற்பூரவல்லி – 05, தண்ணீர், வெற்றிலை – 01, இஞ்சி – சிறிதளவு, சீரகம் – 01 தே.கரண்டி, மிளகு – 01 தே.கரண்டி, மஞ்சள் – 01 சிட்டிகை

செய்முறை – ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் கொதித்து வரும் தண்ணீரில் கற்பூரவல்லி, வெற்றிலை, இஞ்சி, சீரகம், மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் வடிக்கட்டி தினமும் குடித்து வந்தால் சளி தீர்ந்து விடும்.

Back to top button