ஏனையவை

நீங்கள் தலை சீவும்போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!

பொதுவாகவே பெண்கள் என்றால் முடியை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று தான் நினைத்துக்கொள்வார்கள். அதில் ஒரு சிலருக்கு முடி வளரும் மற்றும் வேறொருவருக்கு முடி உதிர்வும் ஏற்படும்.

அதற்கு ஊட்டசத்து குறைபாடு மற்றுமே காரணம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தலை சீவும் வேளையில் நீங்கள் செய்யும் சிறிய தவறுமே அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அவ்வாறு நாம் விடும் தவறு பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து பற்றியும் மேலதிகமாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

சீப்பை பயன்படுத்தி சீவும்போது அது முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

அகலமான பற்கள் கொண்ட சீப்பை தேர்வு செய்வது நல்லது.

ஈரமாக இருந்தால் தலைமுடியை சீவக்கூடாது.

தலையை சீவி நுனியில் இறுக்கமாக முடிச்சு போடுவார்கள். அதை செய்யவே கூடாது.
ஈரமான முடியை சீவும் முறை

ஈரமான முடியை வேகமாக சீப்பு வைத்து சீவக்கூடாது.

சிக்கை சீப்பு கொண்டு எடுக்காமல் கைகளால் மெதுவாகப் பிரித்து எடுக்க வேண்டும்.

அதன்பிறகு சீப்பை வைத்து தலை சீவலாம். ​


திக்கான முடியை சீவும் முறை

தலையை குனிந்து கொண்டு முடியை தலைகீழாக சீவ வேண்டும். அப்படி செய்யும்போது வேர்க்கல்கள் தூண்டப்பட்டு முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

Back to top button