அதிக பொடுகு தொல்லையிலிருந்து விடுபட இந்த ஹேர் மாஸ்க் மட்டும் யூஸ் பண்ணி பாருங்க!
பொதுவாகவே பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் பொடுகு தொல்லை என்பது அதிகமாகவே இருக்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெரியாமல் பலரும் அலறிக்கொண்டு இருப்பார்கள். ஆகவே வீட்டில் இருக்கும் இயற்கையான ஒரு சில பொருட்களை வைத்து எப்படி இலகுவான முறையில் ஓர் தீர்வை காணலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருள்கள்
மருதாணி இலை – 2 கட்டு
எலுமிச்சை பழம் – 1
தயிர் – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் எழுமிச்சை பழத்தை எடுத்து நன்றாகப் பிழிந்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து தயிர் இரண்டு ஸ்பூன் சேர்த்துஅதில் தண்ணீர் சேர்க்காமல் மருதாணி தலையை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த மருதாணி பொடியை நான்கு ஸ்பூன் அளவிற்கு எடுத்து, நன்றாக பேஸ்ட் போல் கலக்கிக் கொள்ள வேண்டும்.
இதை தலையில் தடவி 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். அப்படியே 15 முதல் 30 நிமிடங்கள் ஊற விடவேண்டும்.
இறதியாக சீயக்காய் பூசி குளிக்கலாம். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தி வர பொடுகானது சீக்கரிமாக குறையும்.