ஆன்மிகம்

நாளைய தினம் கார்த்திகை தீபத் திருவிழா; விளக்கேற்ற உகந்த நேரம்

கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

கார்த்திகை தீபம் ஏற்றுவதன் அறிவியல் காரணம்
மழை காலத்தில் புயல் தோன்றி அதனால் மழை அதிகமாக பொழிவது வழக்கம். மழை நல்ல விஷயம் என்றாலும், புயலால் பல சேதாரம் ஏற்படுவதும் வழக்கம்.

புயலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் பெரும் தீபம் ஏற்றுவதால், புயல் தோன்றுவது தடுக்கப்படுவதோடு, அப்படியே தோன்றினாலும் அதன் வேகம் தணிக்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மூன்று தேவியர்களின் சங்கமம்

தீப சுடரானது மகாலட்சுமியாகவும், அதில் தோன்றும் ஒளி சரஸ்வதியாகவும். வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது. மனிதனையும் இறைவனையும் இணைக்கக்கூடியதாகத் திருவிளக்குகள் விளங்குகின்றன.

அதாவது மனித ஆத்மாவும், இறைவனுக்கு இடையேயான உறவை உணர்த்தக்கூடியதாக இருக்கின்றது. ஒரு தீப சுடர் எரியும் போதும் அந்த விளக்கில் ஊற்றப்பட்டுள்ள எண்ணெய் மெல்ல மெல்ல அந்த திரி உட்கிரகித்து, தீப சுடர் எரிகிறது.

தீப சுடர் அகத் தோற்றமாகவும், அதன் செயல்பாடு புறத்தோற்றமான எண்ணெய், திரி, விளக்கு போன்றவற்றால் செயல்படுகிறது.

இப்படி திருவிளக்கானது அதில் இருக்கும் மறை பொருள் மூலம் நம் ஆன்மாவும், இறைவனையும் இணைக்கிறது.

கார்த்திகை தீபம் புராண கதை

கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பெளர்ணமி தினத்தில் சிவபெருமான் எனும் முக்கண்ணன் தன்னுடைய முறுவலாலேயே மூன்று புரங்களையும் எரித்த திரிபுர தகனம் நடத்தினார்.

திரிபுர தகனத்தின் போது ஈசனின் சிரிப்பொலியானது இந்த உலகம் முழுவதும் பரவி ஜோதியாக பிரகாசித்தது. உலகமே ஒளிவெள்ளமானது. அதுமட்டுமல்லாமல் தீய சக்திகளை அழிக்கும் அக்னி பிழம்பாக அமைந்ததோடு, உலகை வெளிச்சமாக்கியது.

சிவபெருமானின் அந்த பிரகாசத்தை வழிபடும் விதமாக தான் கார்த்திகை தீப திருநாள் உற்சவம் கொண்டாடப்படுகிறது.

வீட்டில் தீபம் ஏற்ற உகந்த நேரம்

கார்த்திகை தீபம் நம் வீடுகளிலும் ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம்.

நாம் அன்றைய தினத்தில் மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு. வீடுகளில் தீபங்கள் ஏற்ற தயாராக இருக்க வேண்டும்.

அதன்பின்னர் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படக்கூடிய மாலை 6 மணிக்கு நாமும் நம் வீட்டு வாசல் மற்றும் பிற இடங்களில் வைக்கக்கூடிய தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சரியான நேரமாக இருக்கும்.

Back to top button