கேரளா ஸ்டைலில் தித்திப்பான கோதுமை பாயாசம்: ரெசிபி இதோ
இதுவரை நாம் பல பாயச வகைகளை செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கோதுமையில் பாயாசம் செய்து சாப்பிட்டிருக்க மாட்டோம். இந்த கோதுமை பாயாசம் கோவில்களில் வழங்கப்படும் ஒரு பிரபலமான பிரசாத உணவாகும். அட்டகமான சுவையில் இந்த கோதுமை பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உடைந்த கோதுமை- 150g
தேங்காய் பால்- 400ml
நெய்- 3 ஸ்பூன்
முந்திரி- 15
வெல்லம்- 150g
Condensed Milk- 50ml
உப்பு- 1 சிட்டிகை
ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
திராட்சை- 1 ஸ்பூன்
கிராம்பு- 4
செய்முறை
முதலில் உடைந்த கோதுமையை 2 முறை கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து 4 -5 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே வாணலில் உள்ள நெய்யில் வேகவைத்த கோதுமை சேர்த்து நன்கு கிளறவும்.
தொடர்ந்து அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும். பின் இதில் வெல்லம், Condensed Milk சேர்த்து கிளறவும்.
கொதிக்கின்ற பொழுது இதில் 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
கொஞ்சம் கெட்டியாகி வந்ததும் இதில் உப்பு, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை, நெய் சேர்த்து இறுதியாக கிராம்பை ஒன்றிரண்டாக உடைத்து போட்டு இறக்கினால் சுவையான கோதுமை பாயாசம் தயார்.