இலங்கை

முதன் முறையாக யாழ்.போதனாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதன் தவவையாக வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு அவரது தாயார் வழங்கிய சிறுநீரகம் பொருத்தப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் பி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சை நிபுணர் தம்பிலி தவசேந்தன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வெற்றிகரமான சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறுநீரகங்கள் இயல்பான செயல்பாட்டின் ஒரு பகுதியை மட்டுமே செய்யும் போது, அது சிறுநீரக நோய் என்று அழைக்கப்படுகிறது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எப்போது தேவைப்படுகிறது ?

இந்த நிலை சிறுநீரக செயலிழப்புள்ள நோயாளிகள் வழக்கமான டயாலிசிஸ் மூலம் தங்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து கழிவுகளை அகற்ற வேண்டும் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

உயிரோடுள்ள அல்லது இறந்த தானமளிக்கும் நபரின் சிறுநீரகத்தை சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத நபருக்கு வைப்பதன் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

Back to top button