காலை உணவை தவிர்ப்பதால் உண்டாகும் 6 பிரச்சனைகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க
நம்மில் பலரும் காலை உணவை சரியாக சாப்பிடுவதில்லை. அதிலும் வேலைக்கும் செல்லும் அவசரத்தில் காலை உணவை தவிர்ப்பது பழக்கமாகிவிட்டது. இன்னும் சிலர் டீ, காபியோடு காலை உணவை நிறைவு செய்கிறார்கள். அதுவும் உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பதால் உண்டாகும் முக்கியமான 6 பிரச்சனைகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக காணலாம்.
ஆற்றல்
தினமும் காலை உணவை தவிர்த்து வருவதால் உடலில் உள்ள ஆற்றல் குறைகிறது. இதனால் நாள் முழுவதும் சோம்பலை உண்டாக்கி, உடல் மந்தமாகிவிடும்.
நினைவாற்றல்
காலை உணவை தவிர்ப்பதால் நினைவாற்றல் பலவீனமாகிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. ஏனெனில் காலை உணவு மூளைக்கு தேவையான எரிபொருளை தருகிறது.
எனவே நினைவாற்றலை அதிகரிக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த முழு தானியங்கள், பழங்கள் மற்றும் உணவுகளை உண்ணுங்கள்.
அதிகரிக்கும் பசி
காலை உணவை தவிர்ப்பதால் நேரம் போக போக பசி அதிகரிக்கும். இதனால் அதிகமாக சாப்பிடும் போக்கு அதிகரிக்கிறது.
எனவே, காலையில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்புகளை சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும்.
ஊட்டச்சத்து குறைபாடு
காலை உணவை தவிர்ப்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படாமல் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கிறது.
வளர்ச்சிதை மாற்ற குறைபாடு
காலை உணவை தவிர்ப்பது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றம் குறைகிறது. மேலும் இது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
நோய் அபாயம்
தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பதால் இதய நோய், உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது.