உலகச் செய்திகள்ஏனையவை

உலகின் மிகப்பெரிய பாலைவனங்கள் பற்றி தெரியுமா?

இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் பேரழகானதே பாலைவனங்களும் அதற்கு விதிவிலக்கனதல்ல வறண்ட மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாயினும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

பொதுவாக 250 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியை பெறும் பகுதிகள் பாலைவனங்களாகும். புவியின் மொத்த நிலப்பரப்பில் 5/1 பங்கு பாலைவனங்களாக உள்ளன.

முதலாவது மிகப்பெரிய அன்டார்க்டிக் பாலைவனம்!

இங்கு வெப்பநிலை கோடைகாலத்தில் 100 செல்சியஸ் விட அதிகமாகவும் குளிர்காலத்தில் -850 செல்சியஸ் விட குறைவாகவும் காணப்படும். வருடாந்த மழைவீழ்ச்சி 200 மில்லிமீற்றருக்கும் குறைவாகவே காணப்படுகின்றது.

அன்டார்க்டிக் பாலைவனம்

இதன் மொத்த பரப்பளவு 5.5 மில்லியன் சதுரமைல்கள் ஆகும். தென் துருவத்தை சுற்றியுள்ள வரண்ட குளிர் காற்று வீசும் குளிர் பாலைவனம் ஆகும். இதன் தரைப்பகுதி 1.6 கிலோமீற்றர் தடிப்பில் பனியால் 98 சதவிகிதம் மூடப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆர்டிக் பாலைவனம்!

இது கனடா, அலாஸ்கா, பின்லாந்து, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, ரஸ்யா, ஸ்வீடன் ஆகியவற்றின் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

ஆர்டிக் பாலைவனம்

கோடையில் வெப்பநிலை 150 செல்சியஸ் ஆகும். குளிர்காலத்தில் வெப்பநிலை -400 செல்சியஸ் ஆகவும் காணப்படும். இங்கு வீசுகின்ற பனிக்காற்று பனிப்பொழிவினை உண்டாக்குகின்றது.

இதன் மொத்த பரப்பளவு 5.4 மில்லியன் சதுரமைல்கள் ஆகும். இது ஒரு குளிர் பாலைவனமாகும்.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய சஹாரா பாலைவனம்!

இது அல்ஜீரியா, சாட், எகிப்து, லிபியா, மொராக்கோ, நைஜீரியா, சூடான் உள்ளிட்ட பல நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

நைல் நதியானது இப்பாலைவனத்தில் உள்ள ஒரே நதியாகும். பகலில் அதிக வெப்பமும் இரவில் அதிக குளிரும் இங்கு உணரப்படுகின்றது.

இதன் மொத்த பரப்பளவு 3.5 மில்லியன் சதுரமைல்கள் ஆகும். உலகின் மிகப்பெரிய வெப்ப பாலைவனம் இதுவாகும்.

உலகின் நான்காவது மிகப்பெரிய அரேபியன் பாலைவனம்!

ஏமன், பாரசீக வளைகுடா, ஈராக், ஓமன் , யோர்தான் ஆகிய நாடுகளினுடைய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இது ஒரு வரண்ட வெப்ப பாலைவனமாகும். இதன் வருடாந்த மழைவீழ்ச்சி 100 மில்லிமீற்றருக்கும் குறைவாகும்.

அரேபியன் பாலைவனம்

இதன் மொத்த பரப்பளவு 900,000 சதுர மைல்கள் ஆகும்.

உலகின் ஐந்தாவது பெரிய கோபி பாலைவனம்!

இது ஒரு குளிர் பாலைவனமாகும். சில வேளைகளில் இதன் குன்றுகளில் பனி உறைந்திருப்பதை காணமுடியும். இமயமலை இந்த பகுதிக்கு வரும் மழைமேகங்களை தடுப்பதால் இது பாலைவனமாகியுள்ளது.

கோபி பாலைவனம்

இதன் மொத்த பரப்பளவு 500,000 சதுர மைல் வடக்கு பகுதியினையும் மொங்கோலியாவின் தெற்கு பகுதியினையும் உள்ளடக்கியுள்ளது.கள் ஆகும். இது சீனாவின் வடமேற்கு மற்றும்

உலகின் ஆறாவது பெரிய கலஹாரி பாலைவனம்!

இது தென்னாபிரிக்கா, பெர்சுவானா, நமீபியா ஆகியவற்றின் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இதன் வடமேற்கு பகுதியில் ஒஹோவாங்கோ எனும் நதி உள்ளது. இதன் மேற்பரப்பு உப்பு படிந்த செற்நிற மணலால் மூடப்பட்டுள்ளது.

கலஹாரி பாலைவனம்

இதன் மொத்த பரப்பளவு 360,000 சதுர மைல்கள் ஆகும். தென்னாபிரிக்காவில் காணப்படும் இது வரண்ட புல்வெளிகளை கொண்டுள்ளது.

உலகின் ஏழாவது பெரிய கிரேட் விக்டோரியா பாலைவனம்!

இது அவுஸ்ரேலியாவில் உள்ள மிகப் பெரிய பாலைவனமாகும். இது அடிக்கடி இடி மின்னல் நிகழும் பகுதியாகும்.

இங்கு குளிர் காலத்தில் வெப்பநிலை 200 செல்சியஸாக குறைவடைவதோடு கோடை காலத்தில் 300-420 செல்சியஸ் வரை காணப்படும். இதன் சராசரி மழைவீழ்ச்சி ஆண்டுக்கு 200 – 250 மில்லிமீற்றர் ஆகும்.

கிரேட் விக்டோரியா பாலைவனம்

இது உலகின் ஏழாவது பெரிய பாலைவனமாகும். இதன் மொத்த பரப்பளவு 220,000 சதுர மைல்கள் ஆகும்.

உலகின் எட்டாவது பெரிய படகோனியா பாலைவனம்!

இதன் பெரும்பகுதி ஆர்ஜென்டீனாவில் மற்றுமொரு பகுதி சிலியினுடைய பிரதேசத்தையும் உள்ளடக்கியுள்ளது. இது ஒரு குளிர் பாலைவனமாகும் இதன் சராசரி வெப்பநிலை 30 செல்சியஸ் ஆகும். மிக அரிதாக 120 செல்சியஸ் வரை உயர்வடையும்.

படகோனியா பாலைவனம்

இதன் மொத்த பரப்பளவு 200,600 சதுர மைல்கள் ஆகும்.

ஒன்பதாவது பெரிய சிரியன் பாலைவனம்!

சிரியன் பாலைவனம்

இது 200,000 சதுர மைல் பரப்பளவினை கொண்டுள்ளது. இது சமதரை பரப்புடன் அதிக பாறைகளையும் கொண்டுள்ளது. இது சிரியா, ஈராக், ஜோர்தான், சவுதி அரேபியா ஆகியவற்றின் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

உலகின் பத்தாவது மிகப்பெரிய கிரேட் பேசின் பாலைவனம்

இப்பாலைவனம் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 177-304 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியினை பெற்றுக் கொள்கின்ற குளிர் பாலைவனமாகும்.

கிரேட் பேசின் பாலைவனம்

இது மிகவும் கடுமையான கோடையையும் கடுமையான பனியையும் அதிக குளிரையும் ஏற்படுத்தும் காலநிலையை கொண்டுள்ளது.

இது அமெரிக்காவில் காணப்படுகின்ற மிகப்பெரிய பாலைவனமாகும். இதன் மொத்த பரப்பளவு 190,000 சதுர மைல்கள் ஆகும்.

Back to top button