ஏனையவை

வீட்டில் சமைத்த சாதம் மிஞ்சிவிட்டதா? உடனே மொறுமொறு வடை செய்து சாப்பிடுங்க

பொதுவாகவே வீட்டில் சமைக்கும் சாதமானது மிஞ்சி விடும். அதை வீச தான் செய்வீர்கள். ஆனால் அதற்கு பதிலாக சாதம் மிஞ்சி விட்டால், உடனே மொறுமொறு வடை செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்
சாதம் – 1கப்

கேரட் – 1கப்

கோவா – 1கப்

வெங்காயம் – 1கப்

பச்சை மிளகாய் – 1

கொத்தமல்லி இலை

கறிவேப்பிலை

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

சீரக தூள் – 1/2 தேக்கரண்டி

உப்பு – தேவையானளவு

கடலை மா – 1 கப்

எண்ணெய்

செய்முறை
முதலில் மிஞ்சிய சாதத்தில் கேரட், கோவா, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், சீரக தூள், உப்பு மற்றும் கடலை மா சேர்த்து மா பதத்திற்கு நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வடை போன்று கலவையை தட்டி பொறித்து எடுத்துக்கொள்ளவும்.

Back to top button