சுவை மிக்க பஞ்சு இனிப்பு போண்டா செய்யலாம்!
அனைவருக்கும் பிடித்த சுவையான பஞ்சு இனிப்பு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால் – ஒரு கப்
வெண்ணெய் – அரை கப் (100 கிராம்)
மைதா – ஒரு கப் (125 கிராம்)
சர்க்கரை – தேவையான அளவு
ஸ்பூன் உப்பு – ஒரு சிட்டிகை
முட்டை – 6
சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
1. பாத்திரத்தில் ஒரு கப் பால் சேர்த்து, அதில் அரை கப் வெண்ணெய் சேர்த்து பாலை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
2. பின்னர், அதில் மைதா, சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு கிளற வேண்டும். பின்னர் மாவு பதத்திற்கு வந்த பிறகு அதை மற்றொரு கிண்ணத்தில் மாற்றி ஆற விட வேண்டும்.
3. ஆறிய மாவில் 4 முட்டையை ஒன்று ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும். மாவு சூடாக இருக்கும்போது முட்டையை போட கூடாது. அப்படி போட்டால் முட்டை வெந்துவிடும். அதனால் ஆறிய பிறகு முட்டை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
4. ஒரு பைப்பிங் கவரில் இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக தட்டில் விட வேண்டும்.
5. இதை வேக வைக்க அவென்யூவில் 200 செல்சிய்ஸில் 25 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
6. பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, கூட 6 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி, அதில் 3 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இதில் லேசாக சூடுபடுத்தின ஒன்றரை கப் பாலை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
7. கொதித்து கெட்டியான பின்னர், வெண்ணிலா செசன்ஸ், 2 டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
8. பின்னர், கெட்டியாக வந்த கலவையை ஒரு கவரில் இட்டு அந்த பஞ்சு போண்டா உள்ளே ஒரு ஓட்டை போட்டு அதில், இந்த கலவையை சேர்க்க வேண்டும்.
சூப்பரான பஞ்சு இனிப்பு போண்டா ரெடி