இலங்கை
லிட்ரோ எரிவாயு விலையில் நாளை நள்ளிரவு முதல் மாற்றம்!

நாளை (04) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபாயை விட குறைக்கப்படலாம் என அவா் குறிப்பிட்டுள்ளார்.