லண்டன்

இந்திய வம்சாவளியை சேர்ந்த லண்டன் பொலிஸ் அதிகாரிக்கு பறிபோன வேலை! – அதிர்ச்சி பின்னணி

சக பெண் ஊழியர் மீது பணியில் இருக்கும் போது பாலியல் தாக்குதல் முன்னெடுத்த இந்திய வம்சாவளி லண்டன் மாநகர பொலிஸ் அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லண்டன் மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்தவர் அர்ச்சித் சர்மா. மார்ச் 6ம் திகதி வூட் கிரீன் கிரவுன் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவருக்கு தண்டனை விதித்தது.

இதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பின்னர் அர்ச்சித் சர்மா தமது வேலையை ராஜினாமா செய்துள்ளார். ஜூன் 9ம் திகதி வெள்ளிக்கிழமை, அதே நீதிமன்றம் இவருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளதுடன் 10 ஆண்டுகள் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் இவரது பெயரும் பதியப்பட்டிருக்கும் என தீர்ப்பளித்துள்ளது. தொடர்புடைய சம்பவமானது 2020 டிசம்பர் 7ம் திகதி நடந்ததாக கூறப்படுகிறது. அப்போதே பாதிக்கப்பட்டவரால் வழக்கும் பதியப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது இருவரும் பணியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முடிவில் 2021 ஜூலை 28ம் திகதி அர்ச்சித் சர்மா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டார். இனி மேலும் அர்ச்சித் சர்மா காவல் துறையில் எந்த பிரிவிலும் பணியாற்ற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அர்ச்சித் சர்மாவின் நடத்தை வெறுக்கத்தக்கதாக இருந்தது என்றும், அவருடைய செயல்கள் நமது காவல் துறைக்கு துரோகம் இழைக்கும் செயலாகும் எனவும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல் முறையாக அர்ச்சித் சர்மாவின் புகைப்படத்தை பிரசுரிக்க பத்திரிகைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Back to top button