ஆன்மிகம்இன்றைய ராசி பலன்

தனுசு ராசியில் பயணம் செய்யும் சந்திர பகவான்; இன்றைய ராசிபலன்

சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி புதன்கிழமை 13.12.2023,சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.49 வரை அமாவாசை. பின்னர் பிரதமை. இன்று பிற்பகல் 12.18 வரை கேட்டை. பின்னர் மூலம். கிருத்திகை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
சிந்தனைத் திறனால் சிக்கல் சிரமங்களைக் களைவீர்கள். கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். கொடுக்கல் வாங்கலை சுமுகமாக நடத்துவீர்கள். வேலையிடங்களில் பாராட்டு வருவீர்கள். பிள்ளைகள் படிப்பில் அதிக அக்கறை காட்டுவீர்கள். கல்யாண ஏற்பாடுகள் செய்வீர்கள்.

ரிஷபம்
எதிர்ப்புகள் தொழிலுக்கு இடையூறாக இருந்தாலும் தக்க உதவியின் மூலம் அதைத் தாண்டி வருவீர்கள். வேலைப் பளுவை விடா முயற்சியால் முடிப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். காதலியிடம் திட்டு வாங்குவீர்கள். மனைவியின் பேச்சால் மன நிம்மதி இழப்பீர்கள். பண உதவிகள் தாமதமாக பெறுவீர்கள். சந்திராஷ்டம நாளாக உள்ளதால் கவனம் தேவை. ‌

மிதுனம்
மாமனார் வீட்டு மங்கள நிகழ்ச்சியில் பங்கெடுப்பீர்கள். வீடு புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டு பயணங்களுக்கு முன்னெடுப்பு செய்வீர்கள். தான தர்மங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். சிறு வியாபாரிகள் லாபம் அடைந்து மனநிறைவு கொள்வீர்கள். வேலையிடங்களில் பாராட்டு பெறுவீர்கள். நீண்ட நாள் கால் வலியிலிருந்து விடுபடுவீர்கள்


கடகம்
வெளியிடங்களில் சாப்பிடுவதால் வயிற்று கோளாறால் சிரமப்படுவீர்கள். உறவுகள் உதவிகரமாக இல்லாததால் உற்சாகம் இழப்பீர்கள். போட்டி பந்தயங்களில் இழப்பை சந்திப்பீர்கள். கல்லூரி செலவுகளுக்கு கடன் வாங்குவீர்கள். ஆஸ்துமா நோய்க்காக தாயாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். கடனை அடைக்க முடியாமல் கவலைப்படுவீர்கள்.

சிம்மம்
எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி காண்பீர்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்குவீர்கள். பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். சித்திரை மாதம் வாஸ்துக்கு தயார் ஆவீர்கள். வங்கி லோன் எதிர்பார்த்தபடி பெறுவீர்கள். இடப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் தவிப்பீர்கள். வாகனங்களை மாற்றுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருவீர்கள்.


கன்னி
விரும்பிய வேலையில் சேர்வீர்கள். சம்பள உயர்வால் சந்தோஷம் அடைவீர்கள். விவசாய உற்பத்திகள் பெருகும். ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். கணினித்துறையினர் கணிசமான லாபம் பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். காதலியின் அன்பால் களிப்பு அடைவீர்கள். வெளி வட்டார செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.


துலாம்
சகோதர உறவுகளால் சந்தோசம் பெறுவீர்கள். தக்க சமயத்தில் உதவி பண உதவி பெறுவீர்கள். முந்தி வரும் கோபத்தால் சொந்தங்களை இழப்பீர்கள். தொழிலில் தைரியமாக முடிவெடுப்பீர்கள். கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். சக ஊழியர் ஊழியர்களால் சங்கடப்படுவீர்கள். மனைவியின் மரியாதை குறைவான பேச்சால் மனநிம்மதி இழப்பீர்கள்.

விருச்சிகம்
சாதுர்யமாக காய் நகர்த்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள். வாக்கு திறனால் வெளி இடங்களில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மனைவியின் பாராட்டைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு திறனை பார்த்து பெருமைப்படுவீர்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி நல்ல பெயர் எடுப்பீர்கள். கொடுத்த கடனை பக்குவமாக பேசி வசூல் செய்வீர்கள்.


தனுசு
சொல்வாக்கு தவறினால் செல்வாக்கை இழப்பீர்கள். சிறியோர்களால் அவமானப்படுவீர்கள். போட்டி பந்தயங்களில் எதிர்பார்த்த லாபம் அடைய மாட்டீர்கள். வேலையில் கவனத்தை சிதற விடாதீர்கள். எதிரிகளின் இடையூறால் வியாபாரத்தில் சிக்கலை சந்திப்பீர்கள். தொழிலை மந்தமாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.


மகரம்
எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். வியாபாரிகள் விறுவிறுப்பாக விற்பனை செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். மனம் கவர்ந்த காதலிக்கு பைக் வாங்கி கொடுப்பீர்கள். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்தை அடைந்து நிம்மதி பெறுவீர்கள்.


கும்பம்
நில விற்பனையில் அமோகமாக லாபம் அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். வீடு கட்டுவதில் இருந்த பிரச்சனையைப் பேசித் தீர்ப்பீர்கள். கடின உழைப்பால் உறவினர்கள் மத்தியில் பெருமை அடைவீர்கள். மழலை செல்வத்தின் அழுகுரல் கேட்டு மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.


மீனம்
தலையில் பட்ட காயத்திற்கு தந்தையாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். கடல் கடந்து பயணம் மேற்கொள்வீர்கள். விட்டுப் போன உறவுகளை கிட்ட கொண்டு வருவீர்கள். நண்பர்களின் உதவியால் சுப காரியங்கள் செய்வீர்கள். அரசு ஊழியர்கள் அதிக நன்மை அடைவீர்கள். பணியாளர்கள் வேலையிடத்தில் துணிவாக செயல்படுவீர்கள்.

Back to top button